அஞ்சாமை படத்தின் `ஆரிரிராரோ' பாடல் வெளியானது


அஞ்சாமை படத்தின் `ஆரிரிராரோ பாடல் வெளியானது
x

அஞ்சாமை படத்தின் 'ஆரிரிராரோ' வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் விதார்த். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற விதார்த் பல்வேறு துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை , சுரேஷ் சங்கையா இயக்கிய ஒரு கிடாயின் கருணை மனு , ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி , நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை கடந்த ஆண்டு வெளியான டெவில் உள்ளிட்ட படங்கள் விதார்த்தின் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன.

எஸ்.பி. சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "அஞ்சாமை" படத்தில் விதார்த் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகியது. படம் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும், இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அழுத்தமாக கூறி இருக்கும் படமாக அஞ்சாமை அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் 'ஆரிரிராரோ' வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ராஹுல் நம்பியார் மற்றும் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரபட்டு வருகிறது.


Next Story
  • chat