ரசிகர்களின் கோரிக்கை ஏற்பு..! 'கோப்ரா' படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் - படக்குழு அறிவிப்பு


ரசிகர்களின் கோரிக்கை ஏற்பு..!  கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் - படக்குழு அறிவிப்பு
x

ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

சென்னை,

டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் கோப்ரா' படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.நீளம் குறைக்கப்பட்ட படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படும் .


Related Tags :
Next Story