கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார்.
சென்னை,
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது.
அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. மேலும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காந்தாரா திரைப்படம் பார்த்த நடிகர் ரஜினி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தெரிந்தை விட தெரியாதது தான் அதிகம் என்பதை இதை விட சிறப்பாக யாராலும் சினிமாவில் சொல்ல முடியாது. எழுத்தாளர், இயக்குனர், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள். இந்திய சினிமாவில் தலைச்சிறந்த படைப்பை கொடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.