" ஐ லவ் யூ, மை ஆராத்யா" - மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ராய்...!


 ஐ லவ் யூ, மை ஆராத்யா - மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ராய்...!
x

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் இன்று தன் 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் இன்று தன் 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் வருகிறார்கள்.

ஐஸ்வர்யா தன் மகளுக்கு அன்பு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தனது மகளுடன் இருக்கும் புகை படத்தைப் பகிர்ந்துள்ளார். படத்தில் ஐஸ்வர்யா ராய் ஆராத்யாவுக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை பறிமாறினார். படத்துடன், அவர் ஒரு இனிமையான பதிவில், "என் லவ்... மை லைஃப்... ஐ லவ் யூ, மை ஆராத்யா" என்று கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதிக்கு ஆராத்யா நவம்பர் 11, 2011 அன்று பிறந்தார்.


Next Story