பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்தின் 'துணிவு' திரைப்படம் - படக்குழு அறிவிப்பு..!
அஜித் குமார் நடித்து வரும் திரைப்படமான ‘துணிவு’ வரும் 2023 பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை,
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு 'துணிவு' எனபடக்குழு தலைப்பிட்டுள்ளது . ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படமான 'துணிவு' வரும் 2023 பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
' !
— Red Giant Movies (@RedGiantMovies_) October 28, 2022
WE'RE BEYOND EXCITED TO ANNOUNCE OUR ASSOCIATION WITH #AJITHKUMAR's #THUNIVU
Get ready for #ThunivuPongal!⚡️#NoGutsNoGlory#HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @mynameisraahul #romeopictures @kalaignartv_off pic.twitter.com/zpi22xsNby