சிரஞ்சீவி படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகிறது


சிரஞ்சீவி படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகிறது
x
தினத்தந்தி 26 Dec 2022 12:39 AM IST (Updated: 26 Dec 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

வால்டேர் வீரய்யா திரைப்படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,, 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகிறது


Next Story