இணைந்து நடித்த டேவிட் வார்னர் - ராஜமௌலி... வைரலாகும் வீடியோ


இணைந்து  நடித்த டேவிட் வார்னர் - ராஜமௌலி... வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 13 April 2024 12:42 AM GMT (Updated: 13 April 2024 10:16 AM GMT)

ராஜமௌலி , ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்

சென்னை,

பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற மிகப்பெரிய படங்களை இயக்கியவர் ராஜமௌலி. ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ,ராஜமௌலி தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நடித்துள்ள காட்சிகள் மிக நகைச்சுவையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. டேவிட் வார்ன்ர் நம் இந்திய சினிமாவில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என காட்சிப்படுத்தி உள்ளனர் . இந்த விளம்பர படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story
  • chat