வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி?
இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில்
விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணமான 4 மாதங்களில் நயன்- விக்கி இரட்டை குழந்தைகள் எப்படி? என கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர்.
விதிமுறைகள்
*திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.
* தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றாவராக இருக்க வேண்டும்.
* தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதிச்சான்றிதழ் கட்டாயம்.
* ஒரு பெண், ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.
* நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.
* வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.
சட்டம் சொல்வது என்ன?
* 2022-ம் ஆண்டு ஜனவரியில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி.
*கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல்
* கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள்
* கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும்.
*வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும்.
*வாடகை தாய் கருவுற்று குழந்தை பெற்றுத்தரும் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள்
*கருத்தரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.உயிரிழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டு சம்பந்தப்பட்ட தம்பதியர் அல்லது பெண், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
* குழந்தை பேறுக்கு பிறகான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வசதியாக, மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான மருத்துவ காப்பீட்டை, வாடகை தாயின் பெயரில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர் எடுத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.