'கேன்ஸ்' பட விழாவில் டைரக்டர் பா.ரஞ்சித்
‘கேன்ஸ்’ படவிழா, உலகம் முழுவதும் பிரபலம். இந்தப் பட விழாவில், கபாலி, காலா பட டைரக்டர் பா.ரஞ்சித் கலந்து கொள்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
''சினிமா துறையில் லாப நோக்கோடு மட்டுமே இயங்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில், இங்கு பேசவேண்டிய, காட்சிப்படுத்தப்பட வேண்டிய, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம்பிடித்துக் காட்டும் ஒரு நிறுவனமாக நீலம் புரொடக் ஷன்ஸ் இயங்கி வருகிறது.
'பரியேறும் பெருமாள்' படத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பயணம், 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரை வால்', 'சார்பட்டா பரம்பரை ' என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இருக்கிறது. இன்னும் சேத்துமான் ஜெ.பே பி, பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.
இப்போது நான் இயக்கிய 'வேட்டுவம்' என்ற படத்தின் முதல் தோற்றம் 'கேன்ஸ்' படவிழாவில் வெளியிடப்படுகிறது. அந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன்.''
Related Tags :
Next Story