ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் - செல்வராகவன் அட்வைஸ்


ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் - செல்வராகவன் அட்வைஸ்
x

ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் என்று இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

செல்வராகவன் சமீப காலமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து ஆலோசனை வழங்குவது போன்ற டுவீட்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு "கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல" என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்~~~அனுபவம்" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story