"தொடங்கியது டப்பிங் பணி அஜித்தின் 'துணிவு' படம் குறித்து புதிய அப்டேட் -மஞ்சுவாரியர்!


தொடங்கியது டப்பிங் பணி அஜித்தின் துணிவு படம் குறித்து புதிய அப்டேட் -மஞ்சுவாரியர்!
x

'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக அண்மையில் தகவல் வெளியானது.

சென்னை

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும், படத்தின் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், 'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. அதனை மஞ்சு வாரியார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, தனது சமூக வலைதள பக்கத்தில், துணிவு படத்திற்குத் தான் டப்பிங் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




Next Story