கடும் விமர்சனம் : பேஸ்புக்கில் படத்தை மாற்றி ரசிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல டைரக்டர்
அஜித்தை சந்திக்க 8 வருடமாக முயற்சி செய்து சோர்வடைந்து விட்டேன் பிரபல டைரக்டர் பேஸ்புக்கில் படத்தை மாற்றி ரசிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை
அல்போன்ஸ் இயக்கத்தில் கடைசியாக பிருத்விராஜ் நடிப்பில் வெளியான படம் கோல்டு. நீண்ட இடைவெளிக்குப் படம் வெளியான பிறகு, இயக்குனர் டிரோல்களையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது அல்போன்ஸ் தனது படத்தை பேஸ்புக் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார்.
அல்போன்ஸ் புத்ரன் தனது பேஸ்புக்கில் சுயவிவரப் படத்தை மாற்றி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார். தான் யாருக்கும் அடிமை இல்லை என்றும், தன்னை கேலி செய்யவோ, பகிரங்கமாக அவமானப்படுத்தவோ யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை என்றும் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
மேலும் நீங்கள் என்னை டிரோல் செய்கிறீர்கள், உங்கள் திருப்திக்காக என்னைப் பற்றியும் எனது கோல்டு படத்தைப் பற்றியும் கெட்ட வார்த்தைகளால் பேசுகிறீர்கள்.அதனால் இணையத்தில் முகம் காட்டாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
நான் உங்கள் அடிமையும் இல்லை, என்னைப் பகிரங்கமாக கேலி செய்யவோ அல்லது அவமதிக்கவோ நான் உங்களுக்கு உரிமை கொடுக்கவில்லை. எனவே நீங்கள் விரும்பினால் எனது படைப்புகளைப் பார்க்கலாம். மேலும் என் மீது கோபப்பட வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால், நான் இணையத்தில் கண்ணுக்கு தெரியாதவனாக இருப்பேன். நான் முன்பு போல் இல்லை. நான் முதலில் எனக்கு நேர்மையாக இருப்பேன், பின்னர் என் மனைவிக்கு, என் குழந்தைகளுக்கு என்னை உண்மையாக நேசிப்பவர்களுக்கு நேர்மையாக இருப்பேன்.நான் விழும்போது என்னுடன் நிற்பவர்களுடன் நேர்மையாக இருப்பேன்.
நான் விழுந்தபோது உன் முகத்தில் இருந்த புன்னகையை என்னால் மறக்கவே முடியாது. யாரும் வேண்டுமென்றே விழுவதில்லை. இது இயற்கையாக நடக்கும். என்னை வீழ்த்திய அதே இயற்கை என்னை ஆதரவுடன் பாதுகாக்கும். இந்த நாள் இனிதாகட்டும்". என கூறி உள்ளார்.
அஜித்தை சந்திக்க 8 வருடமாக முயற்சி செய்து சோர்வடைந்து விட்டேன்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரனிடம் சமீபத்தில் ஒரு ரசிகர் "அஜித்துடன் ஒருபடம் பண்ணுங்க தலைவா" என கேட்டி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ்.
அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலதுக்கை மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 வருஷம் ஆகிறது.
எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும்.
பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும் என கூறினார்.