'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஆக.22 முதல் சென்னையில் தொடக்கம் ?


ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆக.22 முதல் சென்னையில் தொடக்கம் ?
x

ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஆக.22 முதல் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் ஜெயிலர் படத்தின் மூலம் தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நெல்சன் ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து வந்ததாக கூறப்பட்டது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து திரும்பிய போது நிரூபர்களிடம் கூறுகையில், ஆகஸ்ட்- 15 அல்லது 22 ஆம் தேதியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறினார். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் 22-ந் தேதி அன்று சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story