நாக சைதன்யா ரசிகர்களை சாடிய நடிகை சமந்தா


நாக சைதன்யா ரசிகர்களை சாடிய நடிகை சமந்தா
x

தன்னை வம்புக்கிழுத்த நாக சைதன்யா ரசிகர்களை, நடிகை சமந்தா கடுமையாக விளாசியுள்ளார்.

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தற்போது இந்தி, தெலுங்கு பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகவும், இருவரும் ஜோடியாக ஐதராபாத் நகரில் காரில் சுற்றி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. நாக சைதன்யாவின் படப்பிடிப்பு தளத்துக்கு அடிக்கடி சென்று அவரை சோபிதா துலிபாலா சந்திப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்றும், நடிகை சமந்தாதான் இதுபோன்ற வதந்திகளை ஆள் வைத்து வலைதளத்தில் பரப்புகிறார் என்றும் நாக சைதன்யா ரசிகர்கள் கண்டித்தனர். இது பரபரப்பானது.

இதையடுத்து நாக சைதன்யா ரசிகர்களை சமந்தா சாடி உள்ளார். டுவிட்டரில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், ''பெண்களுக்கு எதிராக வதந்திகள் வந்தால் அதில் உண்மை இருக்கலாம் என்று நம்புகிறீர்கள். அதே நேரம் ஆணை பற்றி வதந்தி வந்தால் அதை பெண்தான் பரப்புகிறார் என்று சொல்கிறீர்கள். இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இன்னும் வளர வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பிரிந்து அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நீங்களும் இதனை கடந்து உங்கள் வேலை மற்றும் குடும்பத்தினர் மீது கவனம் செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.



Next Story