கர்நாடகத்தில் குஜராத் மாடல் தேர்தல் வியூகம்
கர்நாடகத்தில் குஜராத் மாடல் தேர்தல் வியூகம் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார்.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி கோகுல் ரோடு சமுதாய பவன் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷட்டர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் குஜராத் மாடல் தேர்தல் வியூகம் வகுத்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். தேர்தல் வியூகம் குறித்து யாரும் பேசவில்லை. பத்திரிக்கையில் மட்டும்தான் செய்திகள் வருகிறது. பத்திரிக்கையாளர்கள்தான் தெளிவாக இதற்கு பதில் அளிக்கவேண்டும். மாநில அரசு சார்பில்தான் புதிய வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் வியூகம் வேறுபடும். எங்களுடைய கட்சி சாதனைகளை மக்களிடைேய கொண்டு சென்று வாக்கு சேகரிக்கப்படும். பா.ஜனதாவில் மூத்த தலைவர்கள் யாரையும் ஓரம் கட்டவில்லை. கட்சி தலைமை அவர்களுடன் ஆலோசனை நடத்தி ேதர்தல் பணிகுழுவில் நியமிக்க திட்டமிட்டு வருகிறது. காங்கிரஸ்தான் வீண் குற்றச்சாட்டுகளை கூறுகிறது. இந்த குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சியினரிடம் எந்த ஆதாரமும் இல்லை. காங்கிரசில்தான் கோஷ்டிபூசல் உள்ளது. அவர்களின் போட்டியால் காங்கிரஸ் அழிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.