இதுவரை நான் நடித்த படங்களில் எதற்குமே புரமோஷனுக்காக சென்றதில்லை -நடிகை திரிஷா
இதுவரை நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு புரமோஷனுக்காக சென்றதில்லை என நடிகை திரிஷா கூறினார்.
சென்னை
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.
முதல் 3 நாட்கலுக்கு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.அடுத்த 10 நாட்களுக்கு 90 சதவீத டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து உள்ளன.
பொன்னியின் செல்வன் நாளை வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் இன்று நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகை திரிஷா கூறியதாவது;-
பொன்னியின் செல்வன் படத்திற்காக நீங்கள் அனைவரும் பெருமைப்படுவீர்கள்;
வட இந்தியாவிற்கு சென்றாலும் தமிழ் படம் குறித்து அதிகமாக பேசுகிறார்கள், வரவேற்றார்கள்"
படம் ரிலீசுக்கு முன்பு எப்போதும் படப்படப்பு இருக்காது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு படப்படப்பு இருக்கிறது;
இதுவரை நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு புரமோஷனுக்காக சென்றதில்லை என கூறினார்.
நடிகர் பார்த்திபன் பேசும் போது
"நீண்ட நாள் காதலித்த பொன்னியின் செல்வன் படம், நாளை ஆடியன்ஸிடம் செல்கிறது. அடுத்த 6 வாரத்திற்கு இந்த படத்திற்கான ஆரவாரம் எல்லா தியேட்டரிலும் இருக்கும்;
இதுவரை எந்த படத்திற்கும் இவ்வளவு பரபரப்பை சந்தித்ததில்லை என கூறினார்.