இது தான் விஜய் 66 படத்தின் டைட்டிலா ?...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


இது தான் விஜய் 66 படத்தின் டைட்டிலா ?...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
x

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார்

சென்னை,

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். விஜய் 66 படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார் .இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நாயகியாக ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்த திரைப்படம் தயாராகிறது.

இந்த படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோரும் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஏற்கனவே கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்து இருந்தார். கடைசியாக 2009-ல் வெளியான வில்லு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் பிரகாஷ்ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 66 படம் தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாள் (ஜூன் 22) அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


Related Tags :
Next Story