பாலிவுட் 'கான்' நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்...! ஓப்பனாக கூறிய ஜான்வி கபூர்


பாலிவுட் கான் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்...! ஓப்பனாக கூறிய ஜான்வி கபூர்
x

பேட்டியில் ஜான்வியிடம், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் சல்மான் கானுடன் நடிக்கும் ஆசை உங்களுக்கு உள்ளதா என கேட்கப்பட்டது.

மும்பை

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி மற்றும் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் இந்தியில் பிரபல நடிகையாக பிரபலம் அடைந்து வருகிறார். தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படமே கமர்ஷியல் வெற்றி பெற்று, விருதுகளும் கிடைத்ததால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த குட் லக் ஜெர்ரி படம் சமீபத்தில் தான் ரிலீசானது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஜான்வி வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களை பார்ப்பதற்காகவே இவரை இன்ஸ்டா பக்கத்தில் 1.81 கோடி பேர் பாலோ செய்கிறார்கள்.

இந்த சமயத்தில் குட் லக் ஜெர்ரி படத்தின் புரொமோஷனுக்காக ஜான்வி அளித்துள்ள பேட்டி பாலிவுட்டை அதிர வைத்துள்ளது.

அந்த பேட்டியில் ஜான்வியிடம், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் சல்மான் கானுடன் நடிக்கும் ஆசை உங்களுக்கு உள்ளதா என கேட்கப்பட்டது.

அவங்க எல்லாலோரும் பெரிய ஸ்டார்கள். அவர்களுடன் நடிக்க தான் அனைவரும் ஆசைப்படுவார்கள். எனக்கும் அவர்களுடன் நடிக்க விருப்பம் உண்டு. ஆனால் அவர்களின் வயது காரணமாக நான் அவர்களுக்கு ஜோடியாக நடித்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஜான்வி, வருண் தவான், ரன்பீர் கபூர் போன்ற இளம் பாலிவுட் ஹீரோக்களுடன் நடிக்கவே தான் விருப்பப்படுவதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதோடு, பாலிவுட்டில் திருமணமான நடிகர்களில் ரன்பீர் தான் செக்சியஸ்ட் மேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

தென்னிந்திய சினிமா பற்றி பேசும் போது, தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்த ஜான்வி, தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story