ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு


ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
x

'காதலிக்க நேரமில்லை' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சென்னை,

'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவர் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'பேப்பர் ராக்கெட்' வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி தற்போது 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். காவேமிக் அரி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயம் ரவி, நித்யா மேனன் இருவரும் இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story