'காந்தாரா' இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்


காந்தாரா இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்
x

நடிகர் கமல்ஹாசன் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து மடல் ஒன்றை பரிசளித்துள்ளார்.

சென்னை,

கடந்த ஆண்டு வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

இதையடுத்து காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இரண்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து மடல் ஒன்றை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி "இந்திய சினிமாவின் லெஜெண்டிடம் இருந்து இது போன்ற பாராட்டை பெறுவதை மிகப்பெரிதாக கருதுகிறேன். கமல் சாரின் இந்த எதிர்பாராத பரிசை பார்த்து வியப்படைந்தேன்." என்று பதிவிட்டுள்ளார் .


Next Story