35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்க்கும் கமல்ஹாசன் - மணிரத்னம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் 'நாயகன்'. மும்பை 'தாதா' குறித்து கதையான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் அடித்தது..
சென்னை ,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றிபெற்றது. இயக்குனர் மணி மணி ரத்னத்தை பொறுத்தவரை சமீபத்தில் அவர் இயக்கியுள்ள "பொன்னியின் செல்வன்'திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து வெற்றி பெற்றுள்ளது.
நடிகர் கமல் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் இன்று மாலை வெளியான அறிவிப்பில் கமல் ஹாசனின் 234ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
கடந்த 1987-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் 'நாயகன்'. மும்பை 'தாதா' குறித்து கதையான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் அடித்தது..
#KH234 https://t.co/I29fva9RH3
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2022
Related Tags :
Next Story