ஐக்கிய அரபு அமீரக மந்திரியுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்!


ஐக்கிய அரபு அமீரக மந்திரியுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்!
x

Image Credit : Twitter @rameshlaus

தினத்தந்தி 25 Jun 2022 8:35 PM IST (Updated: 25 Jun 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நடிகர் கமலஹாசன் அந்நாட்டின் மந்திரி முபாரக் அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார்.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நடிகர் கமலஹாசன் அந்நாட்டின் மந்திரி முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் உட்பட பலர் நடித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.உலகம் முழுவதும் இந்த படம் மாபெரும் வசூல் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், துபாய் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கலாசார பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளை கடந்து, மக்களை ஒன்றிணைக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்ட்து. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Next Story