36 வருட ஒற்றுமையில் கமல்ஹாசன்-டாம் குரூஸ்


36 வருட ஒற்றுமையில் கமல்ஹாசன்-டாம் குரூஸ்
x

இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன், ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டாம் குரூஸ். இருவருக்குள்ளும் அநேக ஒற்றுமையான விஷயங்கள் இருக்கிறது.

1986-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். கமல்ஹாசனின் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'விக்ரம்' பெயரில் படம் உருவாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது கமல்ஹாசன் குறித்து சுவாரசியமான தகவல் இணையத்தில் உலா வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 1986-ம் ஆண்டு 'டாப் கன்' என்ற படத்தில் நடித்தார். 36 வருடங்களுக்கு பிறகு 'டாப் கன்' 2-ம் பாகத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார்.36 வருடங்களுக்கு பிறகு முந்தைய படங்களின் பெயரிலேயே கமல்ஹாசன் மற்றும் டாம் குரூஸ் நடித்த புதிய படங்கள் திரைக்கு வர உள்ளன.

கமல்ஹாசன்-டாம் குரூஸ் இடையே இந்த வித்தியாசமான ஒற்றுமை குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.


Next Story