'காந்தாரா' படத்தின் கதாநாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ..


காந்தாரா படத்தின் கதாநாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ..
x

'காந்தாரா' படத்தைப் பார்த்த கார்த்தி, ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'காந்தாரா'. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, இப்படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டு வந்தது . அதன்படி, இன்று ( அக்டோபர் 15) திரையரங்குகளில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 'காந்தாரா' திரைப்படம் வெளியானது. இந்நிலையில், 'காந்தாரா' படத்தைப் பார்த்த கார்த்தி, ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story