ஒடிசாவில் பிரபல நடிகர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை


ஒடிசாவில் பிரபல நடிகர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை
x

ஒடிசாவில் பிரபல நடிகர் ராய் மோகன் பரீடா அவரது வீட்டில் மர்ம மரணம் அடைந்து இன்று கிடந்துள்ளார்.



புவனேஸ்வர்,



ஒடிசா மற்றும் வங்காள திரைப்படங்களில் வில்லன் வேடங்களை ஏற்று நடித்த பிரபல நடிகர் ராய் மோகன் பரீடா (வயது 58). ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள பிராச்சி விஹார் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் அறையில் அவர் மர்ம மரணம் அடைந்து இன்று கிடந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் தற்கொலை செய்திருக்க கூடும் என கூறப்படுகிறது. எனினும், போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதன்பின்பே பிற விவரங்கள் தெரிய வரும். அவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். அவரது மறைவை அடுத்து நண்பர்கள் மற்றும் திரை துறையினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராய்மோகனுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சித்தந்தா மஹாபத்ரா கூறும்போது, அவர் ஒரு ஜாலியான மனிதர். வாழ்வில் பல ஏற்ற, இறக்கங்களை பார்த்த அவர் இதுபோன்று செய்வதற்கு நினைத்திருப்பார் என நம்ப முடியவில்லை. தொழிலில் உச்சம் தொட்டவர் என கூறியுள்ளார்.


Next Story