சமந்தா பிரிவுக்கு பின்னர்...! மீண்டும் காதலில் விழுந்த நாக சைதன்யா...!
தனது முன்னாள் மனைவியை பிரிந்து ஒரு வருடம் கழித்து தற்போது நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐதராபாத்
காதலித்து, திருமணம் செய்து கொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். விவாகரத்திற்கு யார் காரணம் என பல வதந்திகள் பரவின.
தனது முன்னாள் மனைவியை பிரிந்து ஒரு வருடம் கழித்து தற்போது நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில வாரங்களாக டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நாக சைதன்யாவும் சோபிதாவும் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்பட்டனர், அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இருவரும் வீட்டில் சிறிது நேரம் கழித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றனர்.
நடிகை சமீபத்தில் 'மேஜர்' படப்பிடிப்பின் போது இருவரும் ஓட்டலில் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் உறவில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்றாலும், இந்த காதல் கதை வதந்தி பற்றிய செய்திகளை இருவரும் இதுவரை மறுக்கவில்லை.