ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜீனி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு


ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜீனி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 10 Sept 2024 6:05 PM IST (Updated: 1 Dec 2024 5:39 PM IST)
t-max-icont-min-icon

ஜெயம் ரவியின் 'ஜீனி' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 'பிரதர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள 'ஜீனி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றது. இதில் 'ஜீனி' கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

தற்போது, ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் 'ஜீனி' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஜெயம் ரவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், இந்த படம் இவருக்கு வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Next Story