'துணிவு' படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியீடு
துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடலின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது
சென்னை,
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. , இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா' பாடலின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Chilla chilla chilla️
— Boney Kapoor (@BoneyKapoor) January 8, 2023
Iru ella naalum chilla
Dhilla dhilla dhilla
Idhu nammaloda jilla✨#Thunivu3DaysToGo #Thunivu Promo #ThunivuFromJan11#ThunivuPongal #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia pic.twitter.com/Yn0bP7j19d