'கலகத் தலைவன்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
நீளாதோ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'கலகத் தலைவன்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், இப்படத்தில் உள்ள 'நீளாதோ' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரியன் வரிகளில் மது ஐயர் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The beautiful melody, #Neeladho from #KalagaThalaivan is out now ➡️ https://t.co/mKqIEAZz7g @Udhaystalin #MagizhThirumeni @RedGiantMovies_ @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @MShenbagamoort3 #RArjunDurai @kalaignartv_off @ArrolCorelli @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/ToD0EJJTP7
— Red Giant Movies (@RedGiantMovies_) November 11, 2022