'லத்தி' படத்தின் புதிய பாடல் வெளியீடு
யுவன் ஷங்கர் ராஜா குரலில் மதன் கார்க்கி வரிகளில் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வீரத்துக்கோர் நிறமுண்டு பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Presenting my favourite song from #Laththi that celebrate the colour of Valour & Bravery#Veerathukkor_Niramundu lyrical video ▶️ https://t.co/kjLRjFunaU
— Vishal (@VishalKOfficial) December 19, 2022
A @thisisysr Musical #MCSanna @madhankarky #LaththiFrom22ndDec #LaththiCharge #Laati