ஏகே 62 படத்தின் புதிய அப்டேட்


ஏகே 62 படத்தின் புதிய அப்டேட்
x

படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஏகே62 படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஏகே62 குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Related Tags :
Next Story