'ருத்ரன்' படத்தின் புதிய அப்டேட்
இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
My birthday special for my fans! #RudhranGlimpsehttps://t.co/EqXCIIfU0Q pic.twitter.com/0GemCpzuBt
— Raghava Lawrence (@offl_Lawrence) October 29, 2022
Related Tags :
Next Story