பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் ரூ.60 கோடியை தொடும்...!


பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் ரூ.60 கோடியை தொடும்...!
x
தினத்தந்தி 30 Sept 2022 5:15 PM IST (Updated: 30 Sept 2022 5:15 PM IST)
t-max-icont-min-icon

பொன்னியின் செல்வன் வெள்ளியன்று கிட்டத்தட்ட ரூ.17 கோடிக்கு முன்பதிவு செய்துள்ளனர். கமல்ஹாசனின் பிளாக்பஸ்டர் விக்ரமின் ரூ.15 கோடியை பொன்னியின் செல்வன் தாண்டி உள்ளது.

சென்னை

பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அதே பெயரில் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இது முதன்முதலில் 1955 இல் வெளியிடப்பட்டது. மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார் , விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், உள்ளிட்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

வர்த்தக ஆதாரங்களின் தகவல் படி பொன்னியின் செல்வன் வெள்ளியன்று கிட்டத்தட்ட ரூ.17 கோடிக்கு முன்பதிவு செய்துள்ளனர். கமல்ஹாசனின் பிளாக்பஸ்டர் விக்ரமின் ரூ.15 கோடியை பொன்னியின் செல்வன் தாண்டி உள்ளது.

இந்தஆண்டு வெளியான அனைத்து தமிழ்ப் படங்களிலும் இதுவே வசூலில் அதிகபட்சமாகும். கூடுதலாக, படத்தின் வெளிநாட்டு முன்பதிவு வசூல் சுமார் 1.3 மில்லியன் டாலர்கள் (ரூ.10 கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளிலும் படம் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாள் வெளிநாட்டு வசூலில் மேலும் ரூ.20 கோடி வரலாம். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தால் முதல் நாளே உள்நாட்டு வசூல் ரூ.40 கோடியைத் தொடக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்திற்கு முதல் நாள் உலகளவில் ரூ.50-60 கோடி வசூல் செய்துள்ளது, இது இந்த வருடத்தில் எந்த தமிழ் படமும் செய்யாத அதிகபட்ச வசூலாகும்.

கமல்ஹாசனின் விக்ரம் ஜூன் மாதம் வெளியானபோது இந்தியாவில் ரூ.33 கோடியும், உலகம் முழுவதும் ரூ.54 கோடியும் வசூலித்தது.பொன்னியின் செல்வன் இந்த வசூலை எளிதில் எட்டிவிடும்.ஆனால் இன்னும் எவ்வளவு அதிக வசூல் கிடைக்கும் என்பதுதான் பார்க்க வேண்டிய விஷயம்.


Next Story