மீண்டும் காதலில் விழுந்தாரா பிரபாஸ்...! கீர்த்தி சனோன் உடன் டேட்டிங் என தகவல்...!
மும்பை
பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ் படம் வெளியாகிறது.அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் நடிகர் பிரபாஸ் டேட்டிங் என பாலிவுட்டில் செய்து உலாவருகிறது.
தான்ஹாஜி படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலி கான், கீர்த்தி சனோன் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகின்றனர். ராமாயண இதிகாசத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த இப்டத்தில் ராமராக நடிகர் பிரபாஸ் நடித்து உள்ளார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் நடிகர் பிரபாஸ் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளம்பி உள்ளது. நெட்டிசன்களும் இவர்கள் இருவரும் ரியல் லைப்பிலும் ஜோடி சேர்ந்தால் சூப்பராக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கரண் ஜோகரின் காபி வித் கரண் சீசன் 7ன் லேட்டஸ்ட் எபிசோடில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சனோனுக்கு நிகழ்ச்சியின் நடுவே நடிகர் பிரபாஸ் போன் செய்து பேசியது தான் தற்போது இப்படியொரு காதல் வதந்தி கிளம்ப காரணமாக அமைந்துள்ளது.
பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்து வந்த சமயத்தில் நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவரும் நண்பர்கள் தான் என பின்னர் வெளிப்படையாக அறிவித்தனர்.
இந்நிலையில், பிரபாஸ் - கீர்த்தி சனோன் டேட்டிங் செய்து வருவதாக கிளம்பியுள்ள தகவல் எந்த அளவுக்கு உண்மை? என்பது தெரியவில்லை.