ஆலியா பட்டின் குறும்பு
ரன்பீர் கபூரை திருமணம் செய்துக் கொண்ட ஆலியா பட் ஜூன் மாதம் தனது கர்ப்பத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகை ஆலியா பட், கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 5 ஆண்டு கால காதலுக்குப் பிறகு இவர்கள் திருமணம் கைகூடியது. திருமணத்துக்கு பிறகும் ஆலியா பட் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் நடித்தார்.
கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியா பட் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தனது கர்ப்பகால புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதனுடன் 'இன்னும் 2 வாரங்களில் வெளிச்சம் வர போகிறது', என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்தனர். சமீபத்தில் தான் கர்ப்பம் என்றார், பின்னர் எப்படி 2 வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று குழப்பம் அடைந்தனர்.
ரசிகர்களின் குழப்பமான விமர்சனங்களை பார்த்த ஆலியா பட், கணவருடன் தான் நடித்த 'பிரம்மாஸ்த்ரா' படத்தின் ரிலீசை தான் அப்படி குறிப்பிட்டேன் என்று குறும்பு செய்துள்ளார்.
ஆலியாபட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.