கொதித்தெழுந்த திரையுலகம்..படங்களில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு தடை?


கொதித்தெழுந்த திரையுலகம்..படங்களில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு தடை?
x

ராஷ்மிகாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான டுவீட் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெங்களூரு

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து வெளியான அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.

அதைவிட 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் பெரும் வெற்றியைப் பெற்று ராஷ்மிகாவுக்கு பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் அதிக வசூல் செய்த படமான சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, 2021 ல் புஷ்பா ஆகிய படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும், புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இதனிடையே தனது கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்‌ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் ராஷ்மிகாவின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் அவர் திருமண முடிவில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார்.

ராஷ்மிகாவின் இந்த அணுகுமுறையால் ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் அவர் இந்தி, தமிழ் என தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை விட்டு வேறு மொழியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கன்னட திரையுலகம் ராஷ்மிகாவுக்கு நிரந்தர தடை போடலாம் என கூறப்படுகிறது. அடுத்ததாக ராஷ்மிகா நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு மற்றும் புஷ்பா படங்களில் இருந்து இந்த நடவடிக்கை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ராஷ்மிகாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான டுவீட் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.Next Story