தயாரிப்பாளரை கட்டாயப்படுத்தி வளர்ப்பு நாய்க்கு விமான டிக்கெட் கேட்டேனா? நடிகை ராஷ்மிகா விளக்கம்


தயாரிப்பாளரை கட்டாயப்படுத்தி வளர்ப்பு நாய்க்கு விமான டிக்கெட் கேட்டேனா? நடிகை ராஷ்மிகா விளக்கம்
x

தயாரிப்பாளரை கட்டாயப்படுத்தி வளர்ப்பு நாய்க்குட்டிக்கும் சேர்த்து விமானத்தில் டிக்கெட் போட்டு கொடுக்குமாறு நடிகை ராஷ்மிகா மந்தனா கேட்டதாக பரவிய தகவலுக்கு அவரே உரிய விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அனிமல் என்ற படம் மூலம் இந்திக்கும் போய் உள்ளார். ராஷ்மிகா தனது வீட்டில் ஆரா என்ற உயர் ரக நாயை வளர்த்து வருகிறார். சமீபத்தில் அந்த வளர்ப்பு நாயுடன் முகத்தோடு முகம் உரசியபடி தூங்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த நிலையில் ராஷ்மிகா எப்போதும் வளர்ப்பு நாயுடனேயே இருப்பதாகவும், வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும் அந்த நாயை கொண்டு செல்கிறார் என்றும், தன்னோடு சேர்த்து வளர்ப்பு நாய்க்கும் விமானத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை கட்டாயப்படுத்துகிறார் என்றும் வலைதளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் எரிச்சலான ராஷ்மிகா அதற்கு விளக்கம் அளித்து கூறும்போது, ''எனது நாய் பற்றிய வெளியான தகவலை பார்த்து சிரிப்புதான் வருகிறது. நீங்களே சொன்னாலும் வளர்ப்பு நாயான ஆரா விமானத்தில் பயணம் செய்ய விரும்பாது. ஐதராபாத்தில்தான் அது மகிழ்ச்சியாக இருக்கும். தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்றார்.


Next Story