சல்மான் கானுக்கு ஜோடியாக இணையும் ராஷ்மிகா மந்தனா...எந்த படம் தெரியுமா?


சல்மான் கானுக்கு ஜோடியாக இணையும் ராஷ்மிகா மந்தனா...எந்த படம் தெரியுமா?
x

ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் அல்லு அர்ஜூனின் புஷ்பா-2 படத்திலும், தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முதல் முதலாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பதிவில் தனது அடுத்த படம் பற்றிய அப்டேட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள "சிக்கந்தர்" படத்தில் தான் தற்போது இணைந்துள்ளதாக ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார்.

தற்போது ராஷ்மிகா மந்தனா தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் அல்லு அர்ஜூனின் புஷ்பா-2 படத்திலும், தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை சஜித் நாடியாட்வாலா தயாரிக்கிறார்.



Next Story