"சின்ன கல்லு பெத்த லாபம்" நடிகர் ஸ்ரீ கைகலா சத்யநாராயணா காலமானார்


சின்ன கல்லு பெத்த லாபம் நடிகர் ஸ்ரீ கைகலா சத்யநாராயணா காலமானார்
x
தினத்தந்தி 23 Dec 2022 10:20 AM IST (Updated: 23 Dec 2022 10:26 AM IST)
t-max-icont-min-icon

புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா காலமானார்!

ஐதராபாத்

தெலுங்கில் பழம்பெரும் நடிகர் கைகலா சத்யநாராயணா. தயாரிப்பாளர்,டைரக்டர் என பன்முகதன்மை கொண்டவர் ஸ்ரீ கைகாலா சத்தியநாராயணா இன்று காலை காலமானார்.

86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனல் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.காலை 11 மணிக்கு அவரது உடல் பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா.அதில் வரும் சின்ன கல்லு பெத்த லாபம் என்ற வசனம் பிரபலம்.

பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.சத்யநாராயணா தனது 60 ஆண்டுகால வாழ்க்கையில் வில்லன், குணச்சித்திரக் கலைஞர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1959 ஆம் ஆண்டு 'செப்பை கூத்துரு' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.. 2019-ல் கடைசியாக 'மகரிஷி' படத்தில் நடித்து இருந்தார்.

. 1935 இல் பிறந்த சத்யநாராயணாவின் சொந்த ஊர் கிருஷ்ணா மாவட்டம், குட்லா வல்லேரு மண்டலம், கவுடவரம் கிராமம். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் உள்ளனர். நாளை மகா பிரஸ்தானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தெலுங்கு திரையுலகில் எஸ். வி. ரங்கா ராவுக்கு பிறகு பல்வேறு மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் கைகாலா சத்யநாராயணா. என்.டி.ஆர் நடித்த 'யமகோலா' படத்தில் கைகாலா நடித்த யமதர்ம ராஜு கதாபாத்திரம் அவருக்கு மேலும் கவுரவத்தை பெற்றுத் தந்தது.



Next Story