'தேவரா' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது
நடிகர் சயிப் அலி கான் பிறந்த நாளையொட்டி ‘தேவரா’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தேவரா படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சயிப் அலிகான் கதாப்பாத்திரத்தின் கிளிம்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
கிளிம்ஸ் வீடியோவில் சயிப் அலிகான் மல்யுத்த சண்டை வீரராக காட்சியளிக்கிறார். இவர் இப்படத்தில் பைரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.