சமந்தாவிற்கு என்ன பிரச்சினை...! வெளிநாட்டில் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல்


சமந்தாவிற்கு என்ன பிரச்சினை...! வெளிநாட்டில் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல்
x

சமந்தாவுக்கு சரும பிரச்சினை ஏற்பட்டு இருப்பதால், வெளிநாட்டில் சிகிச்சைப் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை

நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சகுந்தலம் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

நடிகை சமந்தா, இப்போது விஜய தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க இருக்கிறார்.

அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்' என்ற தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதிக வெளிச்சத்தில் நடித்ததால் அலர்ஜி ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாக 'அஞ்சான்' படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தவர் சமந்தா. சமீப காலங்களாக இவரது எந்த போட்டோஷுட்டும் வெளியாகவில்லை. இடையில் யசோதா டீசர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சமந்தா கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை தற்போது ஓய்வில் இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பொது வெளியில் தோன்ற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை அவர் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.


Related Tags :
Next Story