பிரபல தியேட்டரில் ஸ்கிரீன் கிழிப்பு- தனுஷ் ரசிகர்கள் அட்டகாசம்..!


பிரபல தியேட்டரில் ஸ்கிரீன் கிழிப்பு- தனுஷ் ரசிகர்கள் அட்டகாசம்..!
x
தினத்தந்தி 19 Aug 2022 7:54 AM IST (Updated: 19 Aug 2022 7:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் பட ரிலீசான தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனை கிழித்ததால் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை,

'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம் என்பதால், ரசிகர்களும் பெரிய அளவில் திரண்டு வந்து, படத்தைக் கொண்டாடினர்.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் பட ரிலீசான தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனை கிழித்ததால் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஸ்கிரீன் முன்பு நடனமாடியதாகவும், அப்போது சிலர் விரும்பத்தகாத செயலில் ஸ்கிரீனை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story