சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிஜு மேனன்!


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே 23' என்ற படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். அமரன் படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

எஸ்கே 23' படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் இணைந்துள்ளார்.மேலும், நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் 80 சதவீதம் நிறைவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 2025-ல் பொங்கலுக்கு திரையிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அய்யப்பனும் கோஷியும் படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கிய பிஜு மேனன் அப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் வென்றார். தமிழில் மஜா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1 More update

Next Story