எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'கடமையைச் செய்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கடமையைச் செய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'கடமையைச் செய்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் நடித்திருந்த 'டான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா, நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கடமையை செய்'. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடமையைச் செய் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். டி.ஆர் ரமேஷ், ஷாகீர் உசேன் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கடமையைச் செய் திரைப்படம் வருகிற 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




Next Story