குழந்தை பிறந்த செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்து..!


குழந்தை பிறந்த செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்து..!
x

பிரபல இந்தி நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மும்பை,

பிரபல இந்தி நடிகை சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை சோனம் கபூர் பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் ஆவார். கடந்த 2018, ஆம் ஆண்டு ஆனந்த் அஹிஜா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் சோனம் கபூர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு, நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

இதனை தொடர்ந்து, பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Next Story