கவனம் ஈர்க்கும் 'காபி வித் காதல்' படத்தின் பாடல்..!
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் 'மாற்றம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. பா.விஜய் வரிகளில் இன்னோ ஜென்கா பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
The soul-stirring #Maatram song from #CoffeeWithKadhal is out. Listen to it now➡️ https://t.co/IUx4cuYkiw#SundarC @khushsundar @Udhaystalin #AvniCinemax @thisisysr #BenzzMedia @U1Records @JiivaOfficial @Actor_Jai @Act_Srikanth pic.twitter.com/oN8HEtkBjq
— Red Giant Movies (@RedGiantMovies_) October 21, 2022