தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை 7 நாட்கள் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.
சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிகோரி திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தி நடித்துள்ள சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story