சுந்தர்.சி நடித்துள்ள 'தலைநகரம் 2' படத்தின் டீசர் வெளியானது..!


சுந்தர்.சி நடித்துள்ள தலைநகரம் 2 படத்தின் டீசர் வெளியானது..!
x

சுந்தர்.சி நடித்துள்ள 'தலைநகரம் 2' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்திலும் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வி.இசட். துரை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 'தலைநகரம் 2' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story