'யசோதா' படத்தின் டிரைலர் வெளியீடு


யசோதா படத்தின் டிரைலர் வெளியீடு
x

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து 'யசோதா' படத்தின் டிரைலர் நேற்றுவெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



Next Story