தமிழில் மொழிமாற்றம் ஆகிறது, நயன்தாரா நடித்த தெலுங்கு படம்
கோபிசந்த் ஜோடியாக நயன்தாரா நடித்த ‘புல்லட்’ என்ற தெலுங்கு படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இது, ரூ.40 கோடி செலவில் தயாரான படம். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் சப்-ரிஜிஸ்திரராக நடித்து இருக்கிறார். பிரதீப்ராவத் வில்லனாக வருகிறார்.
வேலை வெட்டி எதுவும் செய்யாமல் ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன், ஒரு கட்டத்தில் வெகுண்டு எழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. கோபால் டைரக்டு செய்து இருக்கிறார்.
'வேட்டையாடு விளையாடு', 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', 'வித்தகன்', 'சீனு', 'மாண்புமிகு மாணவன்' ஆகிய படங்களை தயாரித்த செவன்த் சேனல் நாராயணன் இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்.
Next Story